யாழ் தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து இன்று (13) சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ் தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து இன்று (13) சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 

உயிரிழந்த சிறுமி திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த அவரின் பாட்டி மயக்க நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சிறுமி 3 நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.