வெல்லவாய பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட பலர்  காயம்!

வெல்லவாய பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட பலர்  காயம்!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று  (21) காலை தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில 7 பாடசாலை மாணவர்கள், பேருந்து சாரதி உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர் இவர்கள்  வெள்ளவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
வெல்லவாய பொலிஸாரின் விசாரணையின் போது, பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.