உக்ரைன் மீது மீண்டும் ரஷ்ய தாக்குதல்

உக்ரைன் மீது மீண்டும் ரஷ்ய தாக்குதல்

உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்புள் மீது ரஷ்யா மீண்டும் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

இது குறித்து அதிகாரிகள் நேற்று(29) கூறியதாவது: நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உட்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி ரஷ்யா வியாழக்கிழமை(28) நள்ளிரவு தீவிர தாக்குதல் நடத்தியது.

இந்த ஆண்டில் மின் உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்தியுள்ள 2ஆவது பெரிய தாக்குதல் இது. இந்தத் தாக்குதலுக்கு 99 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. 10 பிராந்தியங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, ரஷயா கடந்த 22ஆம் திகதி நடத்திய தாக்குதலில், நீப்ரோ நதியின் குறுக்கே ஸபோரிஷியா மாகாணத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய நீா்த் தேக்க மின் உற்பத்தி நிலையத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும், சுமாா் 7 இலட்சம் போ் வசிக்கும் காா்கிவ் நகரில் மின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.