Threads - 7 மணி நேரத்தில் ஒரு கோடி பயனாளர்களை எட்டியது!
மெட்டா (Meta)நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள த்ரெட்ஸ் (Threads) செயலியில் முதல் 7 மணித்தியாலங்களில் மாத்திரம் 10 மில்லியன் பயனாளர்கள் இணைந்துள்ளனர்.
மெட்டா (Meta)நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள த்ரெட்ஸ் (Threads) செயலியில் முதல் 7 மணித்தியாலங்களில் மாத்திரம் 10 மில்லியன் பயனாளர்கள் இணைந்துள்ளனர்.
ட்விட்டர் (Twitter) சமூக வலைத்தள பக்கத்திற்கு போட்டியாக இந்த செயலி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
த்ரெட்ஸ் (Threads) செயலியில் பயனாளர்கள் உச்சபட்சமாக 500 எழுத்துக்களை பயன்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்துக்கு இணையான சில வசதிகளும் த்ரெட்ஸ் (Threads) செயலியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
உலக செல்வந்தர்களின் ஒருவரான ஈலோன் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்து புதிய விதிகளை அறிமுகப்படுத்தினார்.