பழங்குடியின இளைஞரின் கால்களைக் கழுவிய முதலமைச்சர் - காரணம் இதுதான்!
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், நபர் ஒருவர், சிறுநீர் கழித்து அவமரியாதை செய்த பழங்குடியின இளைஞரின் கால்களைக் கழுவி, மாநில முதலமைச்சர் சிவராஜ் சவுகான் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், நபர் ஒருவர், சிறுநீர் கழித்து அவமரியாதை செய்த பழங்குடியின இளைஞரின் கால்களைக் கழுவி, மாநில முதலமைச்சர் சிவராஜ் சவுகான் மன்னிப்பு கோரியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில், குப்ரி என்ற கிராமத்தை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர், புகைப்பிடித்தவாறு, பழங்குடியின இளைஞன் மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இதையடுத்து, குறித்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டதுடன், அவரைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த பழங்குடியின இளைஞன் மீது சிறுநீர் கழித்தவர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞன், இன்று காலை மத்திய பிரதேச மாநில முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, அவரை கதிரையில் அமரச் செய்த, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் சிவராஜ் சவுகான், கீழே அமர்ந்து அவரது கால்களைக் கழுவியுள்ளார்.
அத்துடன், குறித்த சம்பவத்துக்காக, பழங்குடியின இளைஞனிடம், முதலமைச்சர் மன்னிப்பும் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக வலைதளங்களில் வேகமாக வெளியாகியுள்ளது.