இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
காசாவிற்கு உதவிப் பொருட்களை தாமதமின்றி வழங்குவதற்கு, மேலும் பல எல்லைகளை திறக்குமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ்க்கு எதிரான போர் என்ற பெயரில் காசா மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்வதாகவும், எல்லை வழியாக உணவு பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை எனவும் தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
எனினும் இஸ்ரேல் இராணுவம் அதை மறுத்துள்ளது.
இந்த நிலையில், காசாவுக்கு உணவுப்பொருட்கள், தண்ணீர், எரிபொருள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை, எந்தவிதமான தாமதமின்றி கிடைக்க இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன மக்கள் பாதிக்கும் வகையில், இஸ்ரேல் எந்தவிதமான இராணுவ நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து ஒரு மாதத்திற்குள், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.