ஏப்ரலில் முழு சூரிய கிரகணம் !
முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது.
எப்போதாவது அரிதாகத்தான் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும்.
வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.