வாஷிங்டன் விமான விபத்து தொடர்பான இரண்டு புதிய வீடியோக்கள்
வாஷிங்டன் DCக்கு மேலே புதன்கிழமை இரவு நடுவானில் மோதிய விமான விபத்து தொடர்பான இரண்டு புதிய வீடியோக்களை CNN வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோக்களில் இரண்டு விமானங்களும் ஒன்றையொன்று நோக்கிப் பறப்பதையும், பின்னர் வெடித்துச் சிதறி ஆற்றில் விழுவதையும் தெளிவாகக் காணலாம்.
அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் மோதியதில் 67 பேர் பலியான நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.