குவைத் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் - 43 பேர் உயிரிழப்பு!

குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் - Mangaf district இன்று புதன்கிழமை அதிகாலை தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்ததோடு மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீ பரவலுக்கான காரணம் குறித்த ஆதாரங்களையும் உயிரிழந்தவர்கள் பாதிக்க பட்டவர்களின் விபரங்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் அதிகாரி மேஜர் ஜெனரல் ஈத் அல் ஓவெய்ஹானை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.