சுற்றுலாத் துறைக்கு தேவையான வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
சுற்றுலா துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்படி, இலங்கைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், 250 சிறிய பஸ்கள் மற்றும் 75 வேன்களை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.