பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட குழப்பம்!
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் (UK Parliament) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நுழைவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்துக்குள் நுழையும் இடங்களில் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த தானியங்கி அமைப்பில் இன்று (29.08.2024) காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நுழைவதில் பிரச்சினை ஏற்பட, அங்கு குழப்பம் உருவாகியுள்ளது.
ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய அலுவலர்கள் ஆகியோர் இலத்திரனியல் கடவுச்சீட்டின் உதவியுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார்கள்.
குறித்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.