இணைய வழி பாதுகாப்பு சட்டம் குறித்து பிரித்தானியா கவனம்!

இணைய வழி பாதுகாப்பு சட்டம் குறித்து பிரித்தானியா கவனம்!

இணைய வழி பாதுகாப்பு சட்டம் தொடர்பில், சர்வதேச இணைய வழங்குநர்கள் மற்றும் பல்வேறு அக்கறையுள்ள தரப்பினரால் அதிருப்தி வெளியிடப்பட்ட நிலையில், பிரித்தானியாவும் தமது கவனத்தை செலுத்தியுள்ளது.
 
நாடாளுமன்றில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை உன்னிப்பாக கண்காணிப்பதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
 
இந்த சட்டம் கருத்துச் சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஐக்கிய இராச்சியம் கரிசனை செலுத்தியுள்ளது.