மதுபானசாலையை திறக்க வேண்டாம் என சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்!!
தலவாக்கலை டயகம நகர்த்தில் புதிதாக நிறுவப்பட்ட மதுபானசாலையை திறக்க வேண்டாம் என கோரியும் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்த நகரத்தை சேர்ந்த சிறுவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டயகம நகரில் மூன்று மதுபானசாலைகள் உள்ள நிலையில், புதிதாக மதுபான சாலை ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நகரில் திரண்ட சிறுவர்கள் சுவரொட்டிகளையும், பதாதைகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் டயகம நகரிலும் அதனை அண்மித்த தோட்ட தொழிலாளர்களும் இந்த மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.