அர்ச்சுனாவை 'கழுதை' என்று திட்டிய வழிபோக்கர் (காணொளி)
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல்கள் அவர் சார்ந்த சிலருக்கு சரியானதாகத் தெரிந்தாலும், பலருக்கு அவை இன்னும் முகம் சுழிக்க வைக்கும் செயல்களாகவே அமைகின்றன.
அது போல அண்மையில் இடம்பெற்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அர்ச்சுனா தனது வாகனத்தை ஒரு பிரத்தியேகப் பாதையில் உள்நுளைக்கும் போது அந்த பாதை உள்ளே இருந்து பிரதான வீதிக்கு செல்ல முயன்ற ஒருவர் தனது வாகனத்தின் விளக்குகளை ஔிர வைத்து சமிஞ்ஞை காட்டியுள்ளார்.
அதை அவதானித்த அர்ச்சுனா வேண்டும் என்றே தனது வாகனத்தை உள்நுளைத்ததாக அந்த நபர் குற்றம்சுமத்துகிறார்.
பிழையைச் சுட்டி காட்டிய நபருடன் தனது பாணியில் தான் செய்தது சரி என்பது போல் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். கோபமடைந்த நபரும் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நபர் அர்சுனாவை 'கழுதை' என்று பொருள்படும் வகையில் சிங்களத்தில் 'பூருவா' திட்டியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் இப்படிப் பட்ட செயல்கள் அவரைப் பொறுத்தளவில் பெருமையானதாக தெரிந்தாலும், சமூகத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாவது இங்கு குறிப்பிடத்தக்கது.
காட்சி மூலம் அததெரண ஊடகம்.