மலையகத்தின் முக்கிய வீதிகள் மண்சரிவால் மூடப்பட்டன - மாற்றுவீதிகளை பயன்படுத்தவும்!
பதுளை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டமை காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை கோரியுள்ளனர்.
பதுளை - பிபிலை வீதியூடாக 32ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
அதேவேளை, லுனுகல-பிபிலை ஏ5 பிரதான வீதியின் பாதுகாப்பற்ற சரிவுகள் காரணமாக நாளை (8) காலை 7 மணி வரை குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் தியகல பகுதியில் மண் திட்டு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் அந்த வீதியின் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ரத்தினபுரி - தெனியாய வீதியிலும் இதேபோன்று மண்சரிவு இடம்பெற்றுள்ளமை காரணமாக அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாதை சீரமைக்கப்படும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துவது உகந்தது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.