ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பு!
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழ் - சிங்கள புத்தாண்டு தினம் வாரயிறுதி நாட்களில் வருவதன் காரணமாக திங்கட்கிழமையன்று விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.