வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி - எதிர்வரும் நாட்களில் மழை சாத்தியம்!
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் அருகே உருவாகியுள்ள காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இது எதிர்வரும் 12ஆம் திகதியளவில் இலங்கையின் தெற்காக வர இருப்பதன் காரணத்தினால் 11ஆம், 12ஆம் திகதிகளில் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறும் உள்ளது.
இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 13ஆம், 24ஆம் திகதிகளில் குமரிக்கடல் பிரதேசத்தின் தெற்காக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.