பனை அபிவிருத்தி தலைவரிடம் 50 மில்லியன் நஸ்ட்ஈடு வழக்கு தாக்கல்

பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா, தற்போதைய தலைவர் சகாதேவனுக்கு எதிராக 50 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜனவரி 18, 2025 அன்று, பெருந்தோட்டத் தொழில்கள் துணை அமைச்சர் கலந்து கொண்ட ஒரு விழாவில், முன்னாள் தலைவர் கிருஷாந்த பதிராஜா, ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு கொள்கலனிலிருந்தும் 15 மில்லியன் பெற்றதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்தமைக்காக 50 மில்லியன் இழப்பீடு கோரி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தற்போதைய தலைவர் சகாதேவனுக்கு எதிராக வெள்ளவத்தை காவல்துறையில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.