சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - இரகசிய சந்திப்பில் ரணில், மகிந்த!

சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - இரகசிய சந்திப்பில் ரணில், மகிந்த!

அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பலகட்ட இரகசிய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் வெளியிடப்படாமல் இரகசியமாக தகவல் பேணப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றியிருந்தது.

மக்கள் புரட்சி
எனினும் மக்கள் புரட்சியால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரட்டப்பட்ட பின்னர், கட்சியின் உள்ளக மோதல்கள் தீவிரம் அடைந்திருந்திருந்தன.

இந்நிலையில் தம் கட்சியை பாதுகாக்கும் நோக்கில் களமிறங்கப்பட்ட சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், அந்தக் கட்சியே இல்லாமல் போகும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றைய சந்திப்பு மிகவும் முக்கியமானதாக அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது