லங்கா சதொச பொருட்களின் விலையில் மாற்றம்

சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 220 ரூபாவாகவும், 175 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பால் மாவின் விலை 165 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை வெங்காயத்தின் விலை 165 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 240 ரூபாவாக இருந்த சீனி 235 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 288 ரூபாவாக இருந்த சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 285 ரூபாவாகவும், 210 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 209 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் இந்த தள்ளுபடியை பெற்றுக்கொள்ள முடியும் என முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது