சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளைப் பார்வையிட சந்தர்ப்பம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு  கைதிகளைப் பார்வையிட  சந்தர்ப்பம்!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பெப்ரவரி 4 ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை ஒவ்வொரு கைதிக்கும் போதுமான அளவில் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.