தியத்தலாவ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தியத்தலாவ ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
இதில் குழந்தையொன்றும் அடங்குவதாகவும் அத்துடன், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.