ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்கத் தயார் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிதியை வழங்க தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல அதற்காக நிதியை ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு 100 கோடி ரூபாயை தாண்டவில்லை. அதற்கு 10 பில்லியன் தான் ஒதுக்கியுள்ளோம். தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பின்னர் இன்னும் பணம் மீதம் உள்ளது. தேர்தல் வாக்குச்சீட்டு அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர, அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் உள்ளன. தேர்தலுக்கான நிதி குறித்து நிதி அமைச்சகம் எந்த சந்தேகமும் கொள்ளக்கூடாது,
ஏனெனில் செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே பணம் வழங்கப்படும். என அவர் தெரிவித்தார்.