இலங்கையின் யுத்த கால ஒளிப்பட நூலின் அறிமுக நிகழ்வு ஜேர்மனியில் இடம்பெற உள்ளது!

இங்கிலாந்து மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்ட THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES' என்னும் ஒளிப்பட நூலின் அறிமுக நிகழ்வு, ஜேர்மன் நாட்டின் பிராங்க்போர்ட் நகரில் 2024-08-24 அன்று நடைபெறவுள்ளது.

ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில், A4 அளவில், 400 பக்கங்களுடனும் கெட்டி அட்டையுடனும் உருவாக்கப்பட்ட ஒளிப்பட நூல் இது.

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

-Wide Vision Studio

இடம்: Standthalle Kelkheim, Gagernring 1, 65779 Kelkherim (Tanus) German

காலம்: 2024-08-24 சனிக்கிழமை 16:00 (பிற்பகல்)

// கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பல நூறு ஒளிப்படங்கள், 'THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES' என்னும் இந்த ஒளிப்படப் பெருநூலில் இருக்கின்றன. இதுவரை, வேறெங்கும் வெளிவந்திராத ஒளிப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இவை, இலங்கை இறுதிப் போர் சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால அவல வாழ்வியலின் பரிமாணங்களையும் எடுத்துரைக்கும் காட்சி ஆவணங்களாக விளங்குகின்றன.

Hundreds of photographs made by artist and independent journalist Amarathaas are in this biggest photo book titled 'THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES'. It is noteworthy that this book also features photographs that have not been published anywhere else. These visual documents narrate the hidden truths about the final war in Sri Lanka and the dimensions of the tragic wartime life of Eelam Tamils. //