அரசியல்துறையின் அறைகூவல்

அரசியல்துறையின் அறைகூவல்

புதைந்து போகும் புதை குழிகள்..!

சர்வதேச நீதி கோரும் போராட்டத்திற்கான அரசியல்துறையின் அறைகூவல்.

21.07.2023 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அன்பார்ந்த எமது மக்களே!

உலகப் பரப்பில் வாழும் தொன்மை மிக்க இனமாகிய நாம், 

ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளாலும் எம்மினம் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புகளுக்காக

தொடர்ந்து நீதிகோரிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆயுதப் போராட்ட காலத்திலும் அதனை தொடர்ந்த காலத்திலும் எம்மினம் மீதான இனவழிப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது. இவ்வாறான இனவழிப்பு சாட்சியங்களாக அவ்வப்போது எமது தாயக பிரதேசங்களிலும் சிறீலங்கா பிரதேசங்களிலும் மனிதப் புதைகுழிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவ்வாறு இனங்காணப்படும் மனிதப் புதை குழிகள் மீண்டும் புதைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு விடுகின்றது. 

எந்த ஒரு ஆய்வுகளும் இன்றி, நீதி செயற்பாடுகளும் இன்றி அனைத்தும் மறைக்கப்பட்டு, மறுதலிக்கப்படுகின்றது. இந்தச் சூழலில் எமது தாயக பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனிதப் புதைக்குழிகள் என்பது நம் இனத்துக்கு நடந்த இனவழிப்புக்கான மிகப்பெரும் ஆதார சாட்சியாகவே நாம் உணர்கின்றோம். எம்மால் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் எலும்புக் கூறுகளே அவையென நாம் உறுதியாக நம்புகின்றோம். 

 கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை தவிர்த்து, எமது இனத்தின் விடுதலையே ஒரே இலட்சியம் எனும் பொது வேலை திட்டத்தில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழகங்கள், சங்கங்கள், சம்மேளனங்கள், கழகங்கள் என அனைவரும் இணைந்து தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசமெங்கும் நீதி கோரல் போராட்டத்தினை முன்னெடுக்குமாறு அரசியல்துறையாகிய நாம் அறைகூவல் விடுகின்றோம். 

எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும்

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாகிய அறப்போருக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பேரெழுச்சிகொள்ள வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

விடியலை நோக்கிய எமது மக்களின் பயணம் தொடரட்டும்.

என அவ்வரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அவ்வாறு அறிக்கையின் முழு வடிவம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

Files