எக்ஸ்பிரஸ் பேர்ல், நிவ் டைமண்ட் விபத்துகளால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டாலும் அரசாங்கம் அதைப் பொருட்படுத்துவதில்லை!
நீர்கொழும்பில் இருந்து பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் மட்டுமே எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக மீன்பிடி அமைச்சு மதிப்பீடு செய்தாலும், அண்மையில் இந்த கழிவுகள் புத்தளம் கடற்கரையிலிருந்தும் வெளி வந்ததாகவும், எனவே மீன்பிடித்துறை அமைச்சின் தலையை முதலில் சரிபார்க்க வேண்டும் என்றும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சுற்றுச்சூழல் பேரழிவு மட்டுமல்லாது, நிவ் டயமண்ட் கப்பலின் பாதிப்பும் நாட்டின் கடல் வளத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் ஒட்டுமொத்த மீன் வளத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் கூறினாலும் அவர்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறார்கள் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி மீனவ மக்களைப் பற்றி சிந்தித்தாலும் அரசாங்கத்திற்கு மீனவ மக்களைப் பற்றி எந்த புரிதலும் இல்லை என்றும், அடிமட்ட மக்களின் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (22) தொடம்துவ துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் 200 கடல் மைல் தொலைவில் பிரத்தியேக பொருளாதார வலயம் எமக்காக இருந்தாலும், இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன் பிடித் துறையின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என்றும், இது ஒரு பரிதாபகரமான நிலை என்றும், மீன தொழில்துறையினரிடமிருந்து பெரிய பங்களிப்பு கிடைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-
NEWS CLIP ♦️ https://youtu.be/DuRmNR5Kisk