24 மணி நேரத்திற்குள் கிழக்கு காஸாவுக்கு செல்லவும் - பொது மக்களுக்கு அறிவிப்பு!

வடக்கு காஸா பகுதியில் வசிக்கும் மக்களை எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் கிழக்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறியப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு காஸாவில் வசிக்கும் 1.1 மில்லியன் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மனிதாபிமானம் இன்றிய செயற்பாடுகள் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

 அத்துடன், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதல் தொடர்ந்தும் 7வது நாளாகவும் நீடிக்கின்றது.

 மோதல் காரணமாக இதுவரை 2ஆயிரத்து 800 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.