வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் பிரான்சில் மக்களைச் சந்திக்கிறார்கள்
*தாயகத்தில் இருந்து ஐ.நா மன்றுக்கு நீதிகோரி வருகை தந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடனான சந்திப்பு!*
காலம் : 14/10/2023 சனிக்கிழமை
நேரம் : பி.ப 15:00 மணி தொடக்கம் பி.ப 18:00 மணிவரை
இடம் : INSTITUT SKAF
75 Avenue Jean Jaures
93120 La Courneuve
Métro : 7 : La Courneuve
Tram : 1 : Danton
பிரான்சு வாழ் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தமிழின அழிப்பு போர்க் காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிகோரி ஐ.நா மனித உரிமைகள் சபையின் 54வது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள தாயகத்தில் இருந்து வருகைதந்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள் உங்களை சந்திக்க விரும்கிறார்கள்.
தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களையும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிகோரிய செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு உங்களனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
நன்றி.
தொடர்புகட்கு :
+33 6 65 74 60 50
+33 7 68 38 62 88
+33 7 51 51 38 09
+33 7 68 49 83 88