கொழும்பு ஆமர்வீதியில் பாரிய தீ விபத்து!

கொழும்பு ஆமர் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

தீயை கட்டுபடுத்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த தீ விபத்தின் காரணமாக சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ்குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.