மரக்கறி விலையில் வீழ்ச்சி

மரக்கறி விலையில் வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மரக்கறி விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தநிலையில் அதிகபடியான மரக்கறிகள் கையிருப்பில் உள்ளதால் மரக்கறிகளின் விலை இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இன்று ஒரு கிலோ கிராம் போஞ்சி 80 முதல் 120 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கிராம் கெரட் 150 முதல் 200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பச்சை மிளகாய் 300 முதல் 350 ரூபாய் வரையிலும் இன்று பதிவாகியுள்ளது.