விவசாயிகளிடம் குறைந்த விலையில் கொள்வனவு - சந்தையில் அதிக விலைக்கு விற்பனை! 

விவசாயிகளிடம் குறைந்த விலையில் கொள்வனவு - சந்தையில் அதிக விலைக்கு விற்பனை! 

விவசாயிகளிடம் நெல் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படுகின்ற போதிலும் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேநேரம் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்போக அறுவடை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் தங்களது விளைச்சல் மிகவும் குறைந்த விலைக்கே கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் போதிய விலை இன்மையால் தங்களது விளைச்சலை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சில விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலைக்கு அமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 260 ரூபாவுக்கும் சம்பா அரிசி 230 ரூபாவுக்கும் நாடு அரிசி 220 ரூபாவுக்கும் அதிகூடிய சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும்.

எனினும் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கே அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.