சீன நிறுவனம் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகத்தில் இணைய ஊடுருவல்!
சீனாவின் இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகத்தில் இணைய ஊடுருவலை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன் அந்த நிறுவனம் சில ஆவணங்களையும் கசியவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ-சூன் என்ற பெயரில் குறித்த ஆவணங்கள் கசிய விடப்பட்டுள்ளன.
பிரித்தானிய அரசாங்க நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகள் என்பவற்றின் தரவுகள் இவ்வாறு கசியவிடப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தில் இணைய ஊடுருவல் நடத்திய தரப்பினரின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் தங்களுக்கு தகவல் தெரியாது என பிரித்தானியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சகலவிதமான இணையவழி ஊடுருவல் மற்றும் இணையவழி தாக்குதல்கள் என்பவற்றை கடுமையாக எதிர்ப்பதாக சீனா அறிவித்துள்ளது.