பாலஸ்தீன அழிவுகளை கிடையாக வீடியோ பதிவு செய்யுங்கள் - மியா கலீஃபா ட்வீட்!
இஸ்ரேல் மீதான அதிரடி தாக்குதல்களை அடுத்து ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக முன்னாள் ஆபாச நட்சத்திரம் மியா கலீஃபா சமூக வலைதளங்களில் தனது ஆதரவு பதிவுகளை இட்டுள்ளார்.
இஸ்ரேல் மீதான அதிரடி தாக்குதல்களை அடுத்து ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக முன்னாள் ஆபாச நட்சத்திரம் மியா கலீஃபா சமூக வலைதளங்களில் தனது ஆதரவு பதிவுகளை இட்டுள்ளார்.
நீண்ட காலமாக இஸ்ரேலை ஒரு நிறவெறி கொண்ட நாடு என்று அவர் விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட கடந்த வாரயிறுதி நாட்களில் இடம்பெற்ற திடீர் தாக்குதலை அடுத்து தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய ட்வீட்களை அவர் பதிவிட்டு வருகின்றார்.
"பாலஸ்தீனத்தின் நிலைமையைப் பார்த்து, பாலஸ்தீனியர்களின் பக்கம் நில்லாமல் இருப்பீராயின், நீர் நிறவெறியின் தவறான பக்கத்தில் இருக்கிறீர்கள், காலப்போக்கில் அதை வரலாறு சுட்டிக்காட்டும்" என்று அவர் தனது எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தாக்குதல்களை வீடியோ பதிவு செய்யும் போது, செங்குத்தாக அன்றி, கிடையாக பதிவு செய்ய எடுக்க வேண்டும்.
அப்போதுதான் அதன் விளைவுகளையும், உயிர்கள் பறிபோவதையும் நிறவெறியர்கள் காண முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.