டைட்டானிக்கை தேடிச்சென்ற குழுவினர் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்! 110 வருடங்களின் பின் நடந்த சோகம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டானிக் கப்பலை காண சுற்றுலா பயணிகளாக சென்ற ஐந்து பேருடன் காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் "பேரழிவுகரமான வெடிப்பில்" பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டைட்டனில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் அடமிரல் ஜான் மாகர் வியாழக்கிழமை தெரிவித்தார். 

ரிமோட் மூலம் இயக்கப்படும் பாகம் ஒன்று டைட்டனின் வால் கூம்பு பகுதியிலிருந்து சுமார் 1,600 அடி தொலைவில் இருப்பதைக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

கப்பலில் இருந்தவர்கள் யார்: ஹமிஷ் ஹார்டிங், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் ஓஷன்கேட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ் ஆகிய ஐந்து பயணிகளும் இருந்ததாக சுற்றுலா நிறுவனமான OceanGate Expeditions கூறியது.

பயணம் பற்றி: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,000 அடிக்கு கீழே உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை ஆராய்வதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறங்கத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.