ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் போர் நிறுத்த அறிவிப்பு
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் ஒரு நாள் திடீர் போர் நிறுத்தத்தை நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு படி, 30 மணி நேர போர் நிறுத்தம் மொஸ்கோ நேரப்படி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி வரை அமுலில் இருக்கும்.
எனினும், போர் நிறுத்தத்தின் போது, “எந்தவொரு சாத்தியமான மீறல்களுக்கும்” பதிலளிக்க ரஷ்யப் படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் புட்டின் கூறியுள்ளார்.
ரஷ்யாவும், உக்ரேனும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு இருப்பதைக் காட்டாவிட்டால், சில நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை கைவிடலாம் என்ற அமெரிக்காவின் அறிவிப்பைத் தொடர்ந்து, மொஸ்கோவின் 30 மணி நேர போர் நிறுத்தமானது அமுலுக்கு வந்துள்ளது.
எவ்வாறெனினும், புட்டினின் அறிவிப்புக்குப் பின்னர் சிறிது நேரத்திலேயே, ரஷ்யப் படைகள் பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்ததாக உக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு, தமது விமானங்கள் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை முறியடித்ததாக கூறினார்
.