மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 29 வயதான பிரேசில் பிரஜை ஆவார்.
அவரிடமிருந்து சுமார் 05 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 240 மில்லியன் ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும், கைதான பயணியையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.