MPOX என்ற வைரஸ் நோயால் இருவர் பலி!

Mpox என்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்தார்.
இந்த வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இருவரும் 37 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த வைரஸ் நோய், மங்கிபொக்ஸ் என அழைக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் இதுவரை தென்னாப்பிரிக்காவில் 6 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.