ஜேர்மனி விஜயத்தை ரத்து செய்தார் பிரான்ஸ் ஜனாதிபதி!
ஜேர்மனிக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் ரத்து செய்துள்ளார்.
ஜேர்மனிக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் ரத்து செய்துள்ளார்.
23 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தது இதுவே முதன்முறையாகும்.
இதன்படி, பிரான்ஸ் ஜனாதிபதி நாளைய தினம் ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.
எனினும் பிரான்ஸில் இடம்பெறும் போராட்டங்களை அடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி ஜேர்மன் ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.