மத்திய மொராக்கோவில் பாரிய நிலநடுக்கம் - 300 பேர் வரை உயிரிழப்பு என அச்சம்!

மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 300 பேர் வரை உயிரிழந்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய மொராக்கோவில் பாரிய நிலநடுக்கம் - 300 பேர் வரை உயிரிழப்பு என அச்சம்!

அத்துடன் சுமார் 160 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கம் மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகிறது. 

உள்ளூர் நேரப்படி இரவு 11:11 அளவில் (22:11 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், X இல் (முன்னர் Twitter) உறுதிப்படுத்தப்படாத காணொளிகளில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வெடிப்புக்குள்ளான தெருக்களை காணக்கூடியதாக உள்ளது. 

பொதுமக்கள் பதற்றத்துடன் வீதிகளில் ஓடுவதையும் காணலாம். மராகேஷின் பழைய நகரத்தில் சில கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். 

X இல் உள்ள பல காணொளிகள் கட்டிடங்கள் இடிந்து விழுவதைக் காட்டுகின்றன. எனினும் குறித்த கட்டிடங்கள் எந்த பகுதியில் இருந்தவை என அடையாளம் காண முடியாதுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நகரம் அதிர்ந்ததால், உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளுக்கு வெளியே தங்குவதற்கு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.