ஐஸ்லாந்தில் அரை நாளில் 800 முறை நிலநடுக்கம்!
ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் மிகப்பெரிய நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.