தயாசிறி ஜயசேகரவின் உறுப்புரிமையை நீக்குவதை தடுக்கும் மனு நிராகரிப்பு!
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவை கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தும் கட்சித் தலைமையின் தீர்மானத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமது கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்தும் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர், கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன நேற்று முன்தினம் நீக்கியிருந்தார்.
அத்துடன், அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், குறித்த பதவிக்கு சரத் ஏக்கநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.