தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!
உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.
குறிப்பாக இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2015.09 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 11 டொலர்களால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடும் பொழுது 60 டொலர்களால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.