இலங்கை சந்தைகளில் மீன்களின் விலை வீழ்ச்சி!

இலங்கை சந்தைகளில் மீன்களின் விலை வீழ்ச்சி!

இலங்கை சந்தைகளில் மீன் வகைகளின் விலை குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களில் 1000 ரூபாய்க்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் மீனின் விலை தற்சமயம் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோகிராம் பாரை மீன் 400 ரூபாய்க்கும் லின்னா மீன் 300 ரூபாய்க்கு, எட்டவல்லா மற்றும் பலயா மீன் 300 முதல் 350 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நுகர்வோர் மீனை கொள்வனவு செய்வதில் நாட்டம் செலுத்துவதில்லை எனவும் இதனால், மீனின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.