பிரசவத்தின் பின் ஏற்பட்ட உபாதை தாங்காமல் உயிரை மாய்த்த பெண்!

 
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணறொன்றிலிருந்து நேற்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அண்மையில் குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குழந்தை பிறந்த பின் ஏற்பட்ட சுகயீனத்தை தாங்க முடியாத காரணத்தால் தாங்கள் வசித்தது வந்த காணியில் இருந்த 35 அடிக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கிணற்றில் பாய்ந்து உயிரை மாயித்துக் கொண்டுள்ளார்

இது சம்பந்தமாக புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்