வாயு கசிவு குறித்து பொதுமக்கள் புகார் - டெல்லியில் பீதி - பயங்கரவாத எதிர்ப்பு போலி ஒத்திகை காரணம் - பொலிஸார்!

வாயு கசிவு குறித்து பொதுமக்கள் புகார் - டெல்லியில் பீதி - பயங்கரவாத எதிர்ப்பு போலி ஒத்திகை காரணம் - பொலிஸார்!

புதுடெல்லி - யமுனா காதர் பகுதியில் சனிக்கிழமை மாலை பயங்கரவாத எதிர்ப்பு போலி ஒத்திகை நடத்தப்பட்டதாக புதுடெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டது.

சந்தேகத்துக்கிடமான எரிவாயு கசிவு காரணமாக கிழக்கு டெல்லியின் பெரும்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தப் பகுதி மக்கள் தங்கள் கண்களில் எரிச்சல் உணர்வு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக முறையிட்டுள்ளார்கள்.

இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்கள்.