மனைவிமாரை கொடூர கொலை செய்த இந்திய கணவன்மார் - தெலுங்கானாவில் பயங்கரம்!
கணவன் - மனைவி சண்டையில், மனைவியை கொலை செய்த நபர் உடலை சமைத்து ஏரியில் வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், மீர்பேட் பகுதியில், மனைவியை கொலை செய்த நபர், உடலை துண்டு-துண்டாக்கி பிரஷர் குக்கரில் வேகவைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விசாரணை
சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர், தங்களின் மகளை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: 7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் அமர்ந்து கொடூர கொலை.. சிசு வெளியேறி பெண் துள்ளத்துடிக்க மரணம்.!
விசாரணையில், பெண்ணின் கணவரின் மீது சந்தேகம் எழுந்துகொள்ளவே, அதிகாரிகள் அவரை விசாரணை வளையத்தில் கொண்டு விசாரித்து இருக்கின்றனர்.
மனைவி கொலை உறுதி
அதாவது, சம்பவத்தன்று கணவர் - மனைவி சண்டையில் வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நபர், தனது மனைவியை கொலை செய்துள்ளார்.
பின் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டோம் என உணர்ந்தவர், மனைவியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து உடலை ஏரியில் வீசி இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
13 ஆண்டுகளுக்கு முன் திருமணம்
35 வயதாகும் மாதவி, அவரின் கணவர் குருமூர்த்தியால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த ஜோடிக்கு, 2 மகள்கள் இருக்கின்றனர்.
சம்பவத்தன்று மாதவியின் சகோதரி வீட்டிற்கு வந்தபோது, அவர் மாயமானதாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அதிர்ச்சி உண்மை அம்பலமாகியுள்ளது.
இதேபோன்று பிறிதொரு சம்பவம் தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பிணி மானைவியை கணவன் ஈவு-இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிரவைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், காசிக்குடா பகுதியில் வசித்து வருபவர் சத்ய நாராயணா (வயது 21). இவரின் மனைவி சினேகா (வயது 21). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகளே ஆகிறது.
இதனிடையே, போதைக்கு அடிமையான நாராயணா, எப்போதும் மனைவியிடம் தகராறு செய்வதையும், தாக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனிடையே, தற்போது சினேகா 7 மாத கர்ப்பமாக இருக்கிறார்.
முகத்தை அழுத்தி கொடூர கொலை
இந்நிலையில், நேற்று தனது மனைவியை கட்டாயப்படுத்தி தாக்கி மதுபானம் அருந்த வைத்த சத்ய நாராயணா, மனைவியின் வயிற்றில் அமர்ந்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொடூர கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கற்பினின் வயிற்றில் இருந்து சிசு வெளியேறி குழந்தையும் உயிரிழந்த நிலையில், சினேகாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், குழந்தை தனக்கு பிறந்திருக்காது என்ற எண்ணத்தில் கொலை செய்ததாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.