தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!
ஃபெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை (Chennai) விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இண்டிகோ விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சென்னைக்கு வந்து சேர வேண்டிய 12 விமானங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
விமான ஓடுபாதையில் மழை நீர் சூழ்ந்திருப்பதால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.