1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை - நடிகை குஸ்பு!
1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை குஸ்பு, தமது கருத்துக்காக மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில், திராவிட முன்னேற்றக்கழக மகளிர் அணியினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த கருத்து தொடர்பிலேயே தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது
எனினும் குஸ்புவும் சளைக்காமல் பதில் கூறி தனது கருத்தை நியாயப்படுத்த முயற்சித்து வருகிறார்.
அத்துடன் தன்;னுடைய சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குஸ்புவை கண்டித்து அவரது உருவப்படத்தை எரித்து திராவிட முன்னேற்றக்கழகத்தின் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஸ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.