இந்திய மக்களவை தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் ஆட்சி அமைக்கும் முடிவை அறிவிப்பார்!

இந்திய மக்களவை தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் ஆட்சி அமைக்கும் முடிவை அறிவிப்பார்!


இந்திய லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜ. கட்சி தலைமை அலுவலகத்திற்கு 
சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை வரை விறுவிறுப்பாக இடம்பெற்றது.

டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதியிலும் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. உ.பி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜ.,வை விட இண்டியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

ஆனால் பெரும்பான்மையை விட பா.ஜ.க, 300க்கு மேற்பட்ட தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையில் பிரதமர் மோடி களத்தில் இறங்கி உள்ளார். 

இந்தநிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஜூன் 05) காலை நடக்கவுள்ளது.

லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் தலைமையில் முற்பகல் 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. 

இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் அடுத்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இதனிடையே, கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வெற்றிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்  என தெரிவித்தார்.

இத்தேர்தலில் பா.ஜ., 239 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதையடுத்து டில்லி, பா.ஜ., தலைமை அலுவலகம் சென்ற பிரதமர் மோடிக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் வெற்றியை பா.ஜ.வினர் கொண்டாடினர்.

பின்னர் பிரதமர் மோடி பேசிய போது, இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன். 

தொடர்ச்சியாக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது தே.ஜ. கூட்டணி. பா.ஜ., மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி. தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி.

ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். இந்திய மக்கள் என்மீது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். 

ஒடிசாவிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திராவில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளாவிலும் மக்கள் மனதை வென்றுள்ளோம். 

இது நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இத்தேர்தல் வெற்றி கொடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இண்டியா கூட்டணியினர் ஆலோசனை

இண்டியா கூட்டணி கட்சிகள் நேற்று மாலை டில்லியில் ஒன்றுக் கூடி ஆலோசனை நடத்தி உள்ளது. 

இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கூட்டணி கட்சியினர் விவாதித்தனர். 

இந்தநிலையில், பாரதிய சனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், பாஜக தலைமையிலான என்டிஏ வெற்றி பெற்றதற்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

"நெருங்கிய அண்டை நாடாக, இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்நோக்குகிறது" என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். 

இந்திய தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில், இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயமானது இருநாடுகளின் உறவுகளின் வலுவான நிலையையும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.  என்று இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி, தோல்வியை சந்தித்தவர்கள் விபரம் பின்வருமாறு:

தோல்வியை சந்தித்தவர்கள்

ஸ்மிருதி இரானி, ராஜீவ் சந்திரசேகர், நிதிஷ் பிரமாணிக், அர்ஜூன் முண்டா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள்

அர்ஜூன் ராம் மேவல், பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, நித்தியானத் ராய், மன்சுக் மாண்ட்வியா, பிரஹலாத் ஜோஷி, ஸ்ரீபத் நாயக், ஷோபா கண்டல்ஜே, சர்பானந்தா சோனாவல்,ரவிசங்கர் பிரசாத், சபாநாயகர் ஓம்பிர்லா, நிதின் கட்கரி, ஜோதிராதித்யா சிந்தியா,ஜிதேந்திரசிங்கிரிராஜ் சிங், கிஷன் ரெட்டி, தர்மேந்திர பிரதான், பூபேந்திர சிங் , அனுராக் தாக்கூர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.