இலங்கைக்கு கடத்த முயன்ற ₹1.25 கோடி மதிப்புள்ள பீடி இலைகள்!

இலங்கைக்கு கடத்த முயன்ற ₹1.25 கோடி மதிப்புள்ள பீடி இலைகள்!

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பொலிஸாருக்கு நரிப்பையூர் கடல் மார்க்கமாக இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் நேற்று அதிகாலையில் பொலிஸார் நரிப்பையூர் ஐந்து ஏக்கர் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது கடற்கரை பகுதியில் நின்றிருந்த ஒரு பாரவூர்தியை சோதனையிட்டதில், அதில் 100 மூட்டைகளில் பீடி இலை பொதிகள் இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து பாரவூர்தி சாரதியான உசிலம்பட்டியை சேர்ந்த தாமு(43), உடன் காரில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த பொன்ராஜ்(44) ஆகியோரை கைது செய்து சாயல்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், நரிப்பையூர் கடல் மார்க்கமான இலங்கைக்கு கடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. 

மேலும் இந்த பீடி இலைக்கு சொந்தமானவர் யார்? கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது யார் என பொலிஸார், கடலோர பொலிஸார் மற்றும் ராமநாதபுரம் சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

பிடிபட்டுள்ள 2.5 டன் பீடி இலையின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.